வேர்ட்பிரஸை நிறுவுதல்

பிரபலமான 5 நிமிட நிறுவல்

  1. வேர்ட்பிரஸின் இறுதியான பதிப்பை உங்கள் கணினியில் தரவிறக்கி unzip செய்து கொள்ளுங்கள்.
  2. wp-config-sample.php கோப்பினை உங்களுக்கு விரும்பிய எடிட்டிரில் திறந்து உங்கள் தரவுத்தளம் தொடர்பான தகவல்களை சரியாக பூரணப்படுத்தி wp-config.php என்ற பெயரில் சேமித்துக் கொள்ளுங்கள்.
  3. எல்லாவற்றையும் உங்கள் இணைய வழங்கிக்கு தரவேற்றிக்கொள்ளுங்கள்.
  4. உங்கள் இணைய உலாவியை திறந்து அதில் http://your-domain.com/wp-admin/install.php என்ற முகவரிக்கு செல்லுங்கள்.
  5. ஏதாவது தவறு என காணப்பட்டால் உங்கள் wp-config.php கோப்பை சரிபார்த்து மீண்டும் முயற்சியுங்கள்.
  6. உங்களுக்கு விரும்பிய பயனர் பெயரையும் கடவுச்சொல்லையும் தெரிவு செய்து கொள்ளுங்கள்.
  7. நிறுவல் முடிந்ததும் நீங்கள் உள்நுழையும் பக்கத்துக்கு கொண்டு செல்லப்படுவீர்கள் அங்கே நீங்கள் உங்கள் பயனர் பெயரையும் கடவுச்சொல்லையும் கொடுத்து உள்நுழைந்து கொள்ளலாம்

தமிழ் மொழியினை மட்டும் நிறுவிக்கொள்ளுதல்.

  1. நீங்கள் நிறுவியுள்ள ஆங்கிலப்பதிப்புக்கு சரியான தமிழ்ப்பதிப்பினை தரவிறக்கி unzip செய்து கொள்ளுங்கள்.
  2. /wp-content/languages என்னும் கோப்புறையில் உள்ள ta_LK.mo என்னும் கோப்பினை பிரதி செய்து உங்கள் நிறுவலில் உள்ள அதே கோப்புறையில் தரவேற்றிக்கொள்ளுங்கள். அக்கோப்புறை காணப்படாதுவிடின் நீங்கள் ஒன்றை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
  3. உங்கள் wp-config.php கோப்பினை திறந்து அதில் define('WPLANG', 'ta_LK'); என்ற வரியினை சேர்த்து சேமித்துக்கொள்ளுங்கள். (கோப்புகளில் மாற்றங்கள் செய்யமுதல் அவற்றை பிரதி செய்து வைத்துக்கொள்ளுதல் பயன்தரும்)

வேர்ட்பிரஸினை தமிழில் பயன்படுத்தி மகிழுங்கள்.