-
மொழிபெயர்ப்பின்போது கவனிக்க வேண்டியவை.
நீங்கள் வேர்ட்பிரஸினை மொழிபெயர்க்க ஆர்வமாய் உள்ளவர்கள் எனின் கட்டாயம் இப்பதிவை வாசியுங்கள். ஒரு மென்பொருளை மொழிபெயர்ப்பதென்பது சாதாரணமாக ஒரு பணியல்ல. எனவே மொழிபெயர்ப்பின் போது மிக முக்கியமான விடயம் நீங்கள் எதை மொழிபெயர்க்கிறீர்களோ அதில் உங்களுக்கு பூரணமான பரீட்சயம் இருக்கவேண்டும். எனவே வேர்ட்பிரஸை நீங்கள் மொழிபெயர்க்கப்போகின்றீர்கள் என்றால் முதலில் நீங்கள் வேர்ட்பிரஸினை நிறுவி அதனை குறைந்தது ஒரிரண்டு கிழமைகளாவது எல்லாவிதங்களிலும் பயன்படுத்தி பார்க்க வேண்டும். இதன் மூலம் மொழிபெயர்ப்புச்செய்யும்போது ஆங்கில சொற்களை தமிழ்ப்படுத்துவது என்றில்லாமல் தமிழுக்கிசைவான சாதாரண…
-
வேர்ட்பிரஸ் தமிழ் மொழியில்.
நீண்டகாலமாகவே வேர்ட்பிரஸ் பலராலும் தமிழாக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் ஒரு தொடர்ச்சித்தன்மை இல்லாத காரணத்தினாலும் முதலில் செய்பவர்கள் பின்னர் ஆர்வம் குன்றி நிறுத்தி விடுவதனாலும் சிலகாலமாக தமிழ் மொழிபெயர்ப்புக்கள் வெளிவரவில்லை. அத்தோடு வேர்ட்பிரஸின் தமிழ் தளங்களும் செயலிழந்து விட்டன. ஒரு நீண்டகால வேர்ட்பிரஸ் பயனாளர் என்ற வகையில் எனது ஓய்வு நேரங்களில் வேர்ட்பிரஸ் மற்றும் அதனோடு இணைந்த சேவைகளை தமிழ்ப்படுத்துவது என்ற முயற்சியை ஆரம்பித்திருக்கின்றேன். இது ஒரு தனிப்பட்ட முயற்சியாய் அல்லாமல் ஒரு கூட்டு முயற்சியாய்…