நல்வரவு

Localized version screenshot

வேர்ட்பிரஸ்-தமிழ் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

அழகிய இணையத்தளங்களையும் வலைப்பதிவுகளையும் இலகுவாக உருவாக்குவதற்கு பயன்படும் ஒரு இணைய மென்பொருள் வேர்ட்பிரஸ் ஆகும். திறமூல நிரலையுடைய இம்மென்பொருள் இலவசமாய் அனைவருக்கும் கிடைக்கின்றது.

ஆயிரக்கணக்கில் கிடைக்கும் இலவசமான வார்ப்புருக்களும் நீட்சிகளும் வேர்ட்பிரஸின் பயன்பாட்டை மேலும் இலகுபடுத்துவதோடு உங்களையும் 60 மில்லியனுக்கும் அதிகமான அதன் பயனாளர்களில் ஒருவராக மாற்றிவிடவும் உதவும்.

கையேட்டுக்கு செல்லுவதன் மூலம் வேர்ட்பிரஸினை பயன்படுத்துவது பற்றி நீங்கள் மேலும் கற்றுக்கொள்ள முடியும்.

தரவிறக்கங்கள்

வேர்ட்பிரஸின் தமிழ்ப் பதிப்பினை இங்கே நீங்கள் தரவிற்க்கிக் கொள்ள முடியும். நீங்கள் ஏற்கனவே ஒரு ஆங்கில நிறுவலை வைத்திருந்தால் அதனை தமிழ் நிறுவலாக மாற்றுவதற்கு கீழுள்ள உதவிக்குறிப்பினை பாருங்கள். தமிழ் மொழிமாற்றத்தில் உங்களிடம் ஏதேனும் சந்தேகங்கள் ஆலோசனைகள் இருந்தால் இங்கு சொடுக்கி தெரியப்படுத்துங்கள்.

வேர்ட்பிரஸினை பயன்படுத்துவது தொடர்பான கேள்விகளுக்கு கையேட்டை பாருங்கள்

இத் தமிழ் மொழிபெயர்ப்பு ஏறத்தாள 90 வீதத்தினயை இதுவரையும் அடைந்திருக்கின்றதோடு இன்னமும் பூரணப்படுத்தப்படவில்லை. நீங்களும் இம்மொழிபெயர்ப்புக்கு பங்களிக்க விரும்பின் இங்கே வந்து உங்கள் பங்களிப்பினைச் செய்யுங்கள்.

காட்சியறை

வேர்ட்பிரஸை நிறுவுதல்

பிரபலமான 5 நிமிட நிறுவல்

  1. வேர்ட்பிரஸின் இறுதியான பதிப்பை உங்கள் கணினியில் தரவிறக்கி unzip செய்து கொள்ளுங்கள்.
  2. wp-config-sample.php கோப்பினை உங்களுக்கு விரும்பிய எடிட்டிரில் திறந்து உங்கள் தரவுத்தளம் தொடர்பான தகவல்களை சரியாக பூரணப்படுத்தி wp-config.php என்ற பெயரில் சேமித்துக் கொள்ளுங்கள்.
  3. எல்லாவற்றையும் உங்கள் இணைய வழங்கிக்கு தரவேற்றிக்கொள்ளுங்கள்.
  4. உங்கள் இணைய உலாவியை திறந்து அதில் http://your-domain.com/wp-admin/install.php என்ற முகவரிக்கு செல்லுங்கள்.
  5. ஏதாவது தவறு என காணப்பட்டால் உங்கள் wp-config.php கோப்பை சரிபார்த்து மீண்டும் முயற்சியுங்கள்.
  6. உங்களுக்கு விரும்பிய பயனர் பெயரையும் கடவுச்சொல்லையும் தெரிவு செய்து கொள்ளுங்கள்.
  7. நிறுவல் முடிந்ததும் நீங்கள் உள்நுழையும் பக்கத்துக்கு கொண்டு செல்லப்படுவீர்கள் அங்கே நீங்கள் உங்கள் பயனர் பெயரையும் கடவுச்சொல்லையும் கொடுத்து உள்நுழைந்து கொள்ளலாம்

தமிழ் மொழியினை மட்டும் நிறுவிக்கொள்ளுதல்.

  1. நீங்கள் நிறுவியுள்ள ஆங்கிலப்பதிப்புக்கு சரியான தமிழ்ப்பதிப்பினை தரவிறக்கி unzip செய்து கொள்ளுங்கள்.
  2. /wp-content/languages என்னும் கோப்புறையில் உள்ள ta_LK.mo என்னும் கோப்பினை பிரதி செய்து உங்கள் நிறுவலில் உள்ள அதே கோப்புறையில் தரவேற்றிக்கொள்ளுங்கள். அக்கோப்புறை காணப்படாதுவிடின் நீங்கள் ஒன்றை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
  3. உங்கள் wp-config.php கோப்பினை திறந்து அதில் define('WPLANG', 'ta_LK'); என்ற வரியினை சேர்த்து சேமித்துக்கொள்ளுங்கள். (கோப்புகளில் மாற்றங்கள் செய்யமுதல் அவற்றை பிரதி செய்து வைத்துக்கொள்ளுதல் பயன்தரும்)

வேர்ட்பிரஸினை தமிழில் பயன்படுத்தி மகிழுங்கள்.

வலைப்பதிவு

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

January 2, 2012

தமிழ் வேர்ட்பிரஸ் பயனாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். அன்புடன் பகீ

மொழிபெயர்ப்பின்போது கவனிக்க வேண்டியவை.

January 31, 2011

நீங்கள் வேர்ட்பிரஸினை மொழிபெயர்க்க ஆர்வமாய் உள்ளவர்கள் எனின் கட்டாயம் இப்பதிவை வாசியுங்கள். ஒரு மென்பொருளை மொழிபெயர்ப்பதென்பது சாதாரணமாக ஒரு பணியல்ல. எனவே மொழிபெயர்ப்பின் போது மிக முக்கியமான விடயம் நீங்கள் எதை மொழிபெயர்க்கிறீர்களோ அதில் உங்களுக்கு பூரணமான பரீட்சயம் இருக்கவேண்டும். எனவே வேர்ட்பிரஸை நீங்கள் மொழிபெயர்க்கப்போகின்றீர்கள் என்றால் முதலில் நீங்கள் வேர்ட்பிரஸினை நிறுவி அதனை குறைந்தது ஒரிரண்டு கிழமைகளாவது எல்லாவிதங்களிலும் பயன்படுத்தி பார்க்க வேண்டும். இதன் மூலம் மொழிபெயர்ப்புச்செய்யும்போது ஆங்கில சொற்களை தமிழ்ப்படுத்துவது என்றில்லாமல் தமிழுக்கிசைவான சாதாரண […]

வேர்ட்பிரஸ் தமிழ் மொழியில்.

January 26, 2011

நீண்டகாலமாகவே வேர்ட்பிரஸ் பலராலும் தமிழாக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் ஒரு தொடர்ச்சித்தன்மை இல்லாத காரணத்தினாலும் முதலில் செய்பவர்கள் பின்னர் ஆர்வம் குன்றி நிறுத்தி விடுவதனாலும் சிலகாலமாக தமிழ் மொழிபெயர்ப்புக்கள் வெளிவரவில்லை. அத்தோடு வேர்ட்பிரஸின் தமிழ் தளங்களும் செயலிழந்து விட்டன. ஒரு நீண்டகால வேர்ட்பிரஸ் பயனாளர் என்ற வகையில் எனது ஓய்வு நேரங்களில் வேர்ட்பிரஸ் மற்றும் அதனோடு இணைந்த சேவைகளை தமிழ்ப்படுத்துவது என்ற முயற்சியை ஆரம்பித்திருக்கின்றேன். இது ஒரு தனிப்பட்ட முயற்சியாய் அல்லாமல் ஒரு கூட்டு முயற்சியாய் […]